பிரேம் ராவத்தின் செய்தி, நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள வளங்களைப் பாருங்கள்.
குறிப்பு: சில வளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடும்.
பிரேம் ராவத்தின் தனிப்பட்ட இணையதளம்: அமைதியைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டம்.
பிரேமின் சொந்த வார்த்தைகளில், சுய அறிவை நோக்கிய உங்கள் பயணத்தில் உதவும் தேவையானவற்றைக் கண்டறிய வழிகாட்டி. PREMRAWAT.COM தளத்தில் பிரேமின் இணையவழி வளங்களுக்கான இணைப்புகளும் உள்ளன; அவற்றில் அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனல் மேலும் அவரது “PEAK” (Peace Education And Knowledge) பயிற்சித் திட்டங்கள் Intelligent Existence தளத்தில் கிடைக்கின்றன.
TIMELESSTODAY.TV என்பது உள்ளார்ந்த அமைதி குறித்து பிரேம் ராவத் வழங்கும் அனைத்து வளங்களையும் ஒரே இடத்தில் அணுகுவதற்கான வாயிலாகும். குறுகிய அறிமுக வீடியோக்களைப் பாருங்கள். டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான TimelessToday செயலியை பதிவிறக்குங்கள். ஊடகங்கள், இசை, வீடியோக்கள், ஆடியோ, சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் நேரலை ஒளிபரப்புகள் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.
பிரேம் ராவத் அறக்கட்டளை உலகெங்கிலும் உள்ள வாய்ப்புகள் குறைந்த சமூகங்களில் அமைதி, கண்ணியம் மற்றும் வளமையை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பேரிடர் நிவாரணம், கண் மருத்துவமனைகள், Food for Peace திட்டங்கள் மற்றும் மக்கள் தங்கள் சமூகங்களில் வலிமையுடனும் தன்னிறைவுடனும் வாழ உதவும் பிற திட்டங்கள் ஆகியவை இதன் பணிகளில் அடங்கும்.
TPRF-இன் அமைதிக் கல்வித் திட்டம் இணையவழி அமர்வுகளிலும், உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், கல்வி நிறுவனங்கள், சீர்திருத்த மையங்கள் மற்றும் சுகாதார நிலையங்களிலும் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது 80-க்கும் மேற்பட்ட நாடுகளில், 45 மொழிகளில், பல்வேறு மக்களைக் சென்றடைந்துள்ளது. பங்கேற்பாளர்கள் தங்களின் மனிதத்தன்மையிலும், தேர்வு செய்யும் சுதந்திரம், நம்பிக்கை, கண்ணியம் போன்ற தங்களுக்குள் இருக்கும் வளங்களிலும் கவனம் செலுத்தி சிந்திப்பதற்கான வாய்ப்பை இந்தத் திட்டம் வழங்குகிறது.
Words of Peace Global என்பது ஒரு நிகழ்வு இணையவாயிலாகும். இதில் பிரேம் ராவத்தின் தற்போதைய உலகச் சுற்றுப்பயணங்கள், நேரலை நிகழ்வுகள் மற்றும் WOPG YouTube சேனல் ஆகியவற்றுக்கான இணைப்புகள் உள்ளன. அங்கு முழுநீளக் காப்பக வீடியோக்களும் பிற ஊடக வளங்களும் கிடைக்கின்றன. பிரேம் ராவத்தின் அமைதிச் செய்திக்கு நிதியுதவி அளிப்பதில் நீங்கள் எவ்வாறு பங்கேற்கலாம் என்பதற்கான தகவல்களும் வழங்கப்படுகின்றன.