இது பளிங்கில் செதுக்கப்பட்டது அல்ல.
இது மரத்தில் பொறிக்கப்பட்டதும் அல்ல.
பிரேம் ராவத்: அனைத்துக் கலைகளின் கலை
இது பளிங்கில் செதுக்கப்பட்டது அல்ல.
இது மரத்தில் பொறிக்கப்பட்டதும் அல்ல.
இல்லை.
ஞானத்தின் அந்தப் பரிசால் ஒவ்வொரு இதயத்தின் இயக்கமும் அவர்களின் வாழ்நாளில் தொடப்படும்.
ஒரு உயிருள்ள மனிதரால்.
(அது ஒரு மாற்றம், இல்லையா?)
ஒரு உயிருள்ள மனிதர்.
நான் "ஆண்" அல்லது "பெண்" என்று சொல்லவில்லை.
ஒரு உயிருள்ள மனிதர் ... வந்து, அதைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஞானத்தின் பரிசை வழங்குவார்.
அந்த நபர் தமது சொந்த சூழ்நிலைகளைத் தாமே நிர்ணயிப்பார் - எப்போதுமே அப்படித்தான் இருக்கும் - சூழ்நிலைகளை ஒரே மாதிரியாக வைத்திருக்கும் மரபு எதுவும் இல்லை. சூழ்நிலைகள் மாறும்.
சூழ்நிலைகள் மாறும், பொருத்தமானது நிகழும்.
இதயம் தொடப்பட வேண்டும், அவ்வளவுதான்.
ஒரு இதயத்தின் உள்ளே இருக்கும் அத்தகைய ஓர் இடத்திலிருந்து வருவது - மற்றொருவரின் இதயத்தை அடைவது.
அதுதான் அனைத்துக் கலைகளின் கலை.
ஆனால் ஒரு இதயத்தை அடைய: ஒரு குழந்தையின் கள்ளமற்ற தன்மையும், அனைத்து வேதநூல்களின் ஒட்டுமொத்த ஞானமும் தேவை.
காலத்தை வெல்வது, ஒரு மனிதரை அடைவது, ஒரு மனிதரிடம் பேசுவது.
ஆயிரம் பேரிடம் பேசுவது, ஆனாலும் அந்த ஆயிரம் பேரில் ஒவ்வொருவரிடமும் பேசுவது.
இது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட போர்வை அல்ல.
இது நுணுக்கமாக நெய்யப்பட்டுள்ளது, மேலும் முழுமையாக நேர்த்தியுடன் நெய்யப்பட்டுள்ளது.
இது வார்த்தைகள்; அந்த வார்த்தைகள் - ஒருமுறை இதயத்தை அடைந்துவிட்டால் - விலகிச் சென்றுவிடுகின்றன.
அதன் பிறகு அவற்றுக்கு எந்த அர்த்தமும் இல்லை.
மிகப் பெரிய வித்தியாசம்.
ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள ஒரு தேவை, அது மிகவும் அடிப்படையானதும் உண்மையானதுமாகும்.
மொழி ஒரு பொருட்டல்ல.
கலாசாரம் ஒரு பொருட்டல்ல.
அவர் யார், எங்கே இருக்கிறார், அவர் என்ன அல்ல: ஒரு பொருட்டல்ல.
இதுதான் ஞானத்தின் மரபு - விழித்தெழுதல்.
இதை உங்கள் வழியாக ஆக்கிக் கொள்ளுங்கள்.