பிரேம் ராவத்: நிரந்தரத்தின் ஆனந்தம்

தங்கக் கலை

நீங்கள் தற்காலிகமானதற்கும்
நிரந்தரமானதற்கும்
இடையிலான இணைவு.


நீங்கள் தற்காலிகமானவராக இருக்கும் ஒரு பகுதி உள்ளது -

என் பொருள், மிகக் குறுகிய காலமே - அது மறைந்துவிடும்.


மேலும் நீங்கள் மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் நிரந்தரமானவராக இருக்கும் ஒரு பகுதியும் உள்ளது,

அது ஒருபோதும் மறைந்துவிடாது.

தங்கக் கலை
தங்கக் கலை

அந்த இரண்டு வரையறைகள் என்ன?

"தற்காலிகமானது" ...

இல்லாதிருந்தது, இருக்கிறது, இருக்கப்போவதில்லை.


நிரந்தரமானது என்ன?

இருந்தது, இருக்கிறது, இருக்கப்போகிறது.


அந்த இரண்டு விஷயங்களும் ஒன்றாக வந்துள்ளன, அதுதான் நீங்கள்.

என்ன செய்ய முடியும்?

தங்கக் கலை

அற்புதம் இதுதான்:
தற்காலிகமானதன் மூலம்,
நிரந்தரமானதை நீங்கள் உணர்ந்தறிய முடியும்.

தங்கக் கலை

தற்காலிகமானதின் இயல்பே அது நிரந்தரமானதைப் போற்றவும், வியக்கவும், அனுபவிக்கவும், நேசிக்கவும் முடியும் என்பதாகும் - நேசிக்க ... நிரந்தரமானதை.




இரண்டும் ஒன்றிணையும் போதுதான் அது நிகழ முடியும்.

நிரந்தரமானது தன் வழியில் செல்கிறது - அது போய்விட்டது.
தற்காலிகமானது தன் வழியில் செல்கிறது, அதுவும் போய்விட்டது.


அந்த இரண்டும் ஒன்றாக வரும்போது, அங்கே அற்புதம் நிகழலாம்.
அந்த அற்புதம் எதைப் பற்றியது என்பதும் அதுதான்.