என் முன்னால் இருக்கும் என் கிண்ணம்
காலியாக இருக்க வேண்டியதில்லை...
எங்களுக்கு முன்னால் கடந்து செல்லும் இந்த நதி
கண்ணுக்குத் தெரிவதைவிட
மிக மிக மிக மிக அதிகமானதைத் தன்னுள் சுமந்து செல்கிறது.
ஏனென்றால் மேலோட்டமாகப் பார்த்தால்
அது நகர்ந்து செல்லும் தண்ணீரைப் போலத்தான் தெரிகிறது.
ஆனால் ஒருவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
ஒருவர் எனக்குக் காட்டினார், “இந்தக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இந்த நதிக்குள் ஆழமாகத் தோய்த்து வெளியே எடுத்து, தொடர்ந்து அப்படிச் செய்து கொண்டிருங்கள்; ஒரு நாள் உங்கள் கிண்ணம் அமைதியின் பொன்னால் நிரம்பிவிடும்.”
இதைத்தான் நான் செய்கிறேன்.
ஆக, மக்கள் பலர் இருக்கிறார்கள்.
நதி நம் அனைவருக்கும் முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது.
சிலர் நதியைப் பார்த்து, “மிகவும் அழகாக இருக்கிறது” என்று சொல்கிறார்கள். சிலர் நதியைப் பார்த்து, “நான் இதில் பனிச்சறுக்கு செய்ய முடிந்தால் நன்றாக இருக்குமே” என்று சொல்கிறார்கள்.
சிலர் நதியைப் பார்த்து, “நான் இதில் என் படகை ஓட்ட முடிந்தால் நன்றாக இருக்குமே” என்று சொல்கிறார்கள். சிலர் அதைப் பார்த்து, “தெரியுமா, நான் இதில் என் கால் விரல்களை நனைக்கலாம்; எனக்குச் சற்று சூடாக இருக்கிறது, என் கால் விரல்களை இந்த நதியில் நனைக்கப் போகிறேன்” என்று சொல்கிறார்கள்.
இது நல்லதா? இது கெட்டதா?
நான் எந்தத் தீர்ப்பையும் வழங்கப் போவதில்லை.
ஆனால் இந்தக் கண்களால் பார்க்க முடிவதைவிட அதிகமாக,
இந்த நதியுடன் ஓடிக்கொண்டிருக்கும் செல்வத்தை
ஒருவர் எனக்குக் காட்டியிருக்கிறார்.
மேலும் எனக்குக் கொடுக்கப்பட்ட அந்தக் கிண்ணத்தையும்.
இப்போது எல்லாமே அர்த்தமுள்ளதாக இருக்கிறது....
பிரேம் ராவத் - லண்டன், 2004