பிரேம் ராவத்: இதயத்திற்கு ஓர் அறிமுகம்

நீரில் மிதக்கும் வாத்துகள்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருப்பது எது, நம் அனைவரையும் ஒரே விஷயத்திற்காக ஏங்கச் செய்கிறது?

நாம் தேடுகிறோம், எப்போதும் தேடிக்கொண்டே இருப்போம். ஆனால் நாம் எதைத் தேடுகிறோம்? நாம் விரும்புகிறோம், எப்போதும் விரும்பிக்கொண்டே இருப்போம். ஆனால் நாம் எதை விரும்புகிறோம்? மனிதர்கள் பூமியில் வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே, நிறைவை உணர வேண்டும் என்ற அந்த ஏக்கம் இருந்து வந்துள்ளது.

 

நீங்கள் ஏற்கெனவே அறிந்திருப்பதை உங்களுக்கு நினைவூட்டுவதைவிடச் சிறந்த இதயத்தின் அறிமுகம் வேறெதுவும் இல்லை.

நீங்கள் விவாதிக்கவோ மதிப்பிடவோ கூடிய புதிய தகவல் ஒன்றைத் தருவதற்காக நான் இங்கு வரவில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல. இது ஆன்மிகத்தைப் பற்றியது அல்ல. உண்மையில், உலகில் இதற்கென்று எந்தப் பெயரோ அடையாளமோ இல்லை.

நீரில் மிதக்கும் வாத்துகள்

 

அப்படியானால், நீங்கள் எதை அறிந்திருக்கிறீர்கள்? மகிழ்ச்சியாக இருப்பதைப் பற்றி நீங்கள் அறிவீர்கள் — இந்த வாழ்க்கையில் அது உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை அறிவீர்கள். ஆனந்தம் உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். திருப்தி உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் — சோகம் உங்களுக்குப் பிடிக்காது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இவை உங்களுக்கே உரிய எளிய விதிகள், வேறொருவருடையவை அல்ல.

 

திருப்தியுடன் இருப்பது, ஆனந்தத்தில் இருப்பது, மகிழ்ச்சியாக இருப்பது.

நீரில் மிதக்கும் வாத்து

எப்படிப்பட்ட மகிழ்ச்சி?

உருவாக்கப்படும் மகிழ்ச்சி அல்ல, ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் குடிகொண்டிருக்கும் மகிழ்ச்சி. ஏற்கெனவே இருக்கும் ஆனந்தம் — வேறெங்கிருந்தும் கொண்டுவர வேண்டிய அவசியமில்லாத ஆனந்தம்.

 

விழித்தெழும் செயல்முறை என்பது ஒன்றை உருவாக்கும் செயல்முறை அல்ல. நீங்கள் அதை உருவாக்க வேண்டியதில்லை. ஏற்கெனவே இருப்பதை உணர்ந்து நீங்கள் விழித்தெழுகிறீர்கள். பிறகு, உங்கள் இதயத்தால், நிறைவை உணர்வதற்கான சாத்தியத்தை நோக்கி விழித்தெழுங்கள். பிறகு, இந்த வாழ்க்கையில் நீங்கள் நிறைவை உணர முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இந்த வாழ்க்கையில் நீங்கள் திருப்தியுடன் இருக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

 

நீரில் மிதக்கும் வாத்துகள்