இந்த வாழ்க்கை எனும் பரிசைப் பெற்ற
ஒரு மனிதராக,
நீங்கள்
எதை விரும்புகிறீர்கள்?
“நீ ங்கள் தேடிக்கொண்டிருப்பது உங்களுக்குள்ளேயே இருக்கிறது” என்று கூறும் முதல் நபர் நான் அல்ல. இது மிகவும் பழமையான கூற்று. இந்தக் கூற்றைப் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால், இது எப்போதெல்லாம் சொல்லப்பட்டாலும் புதிதாகத் தோன்றுகிறது — நீங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் கேட்டதில்லாதது போல, மீண்டும் மீண்டும் கேட்டிருந்தாலும் கூட.
நீங்கள் தேடிக்கொண்டிருப்பது உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
அ தன் பொருள், நான் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று இங்கே இருக்கிறது: என் நிறைவு என்னைவிட்டு வெகு தொலைவில் இல்லை.
என் மனநிறைவு என்னைவிட்டு வெகு தொலைவில் இல்லை.
என் மகிழ்ச்சி என்னைவிட்டு வெகு தொலைவில் இல்லை.
என் வாழ்க்கை என்னைவிட்டு வெகு தொலைவில் இல்லை.
எ னக்குள்ளே, என் எல்லாப் பூட்டுகளையும் திறக்கும் சாவி இருக்கிறது. என் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விடை என்னிடம் இருக்கிறது. என் புரிதலும், என் தெளிவும், எனக்குள்ளேயே இருக்கின்றன.
உலகத்தின் மழையிலிருந்து நான் தேடும் அடைக்கலம் எனக்குள்ளேயே இருக்கிறது; அது என்னைவிட்டு வெகு தொலைவில் இல்லை.
இதைவிடப் பெரிய உண்மை வேறெதுவும் இல்லை.
அ தைப் பார்த்திருக்கிறேன். நான் உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். மக்கள் ஒரே மொழியைப் பேசாத ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் சென்றிருக்கிறேன். நாணயம் அங்கே செல்லுபடியாகாது; அவர்கள் வாகனம் ஓட்டும் விதம் வேறுபட்டது. அவர்கள் வியாபாரம் நடத்தும் விதம் வேறுபட்டது. மக்களின் தோற்றமும் வேறுபட்டது.
வ ேறுபாடுகளைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் அந்த எல்லா வேறுபாடுகளுக்கும் நடுவில், ஓர் அழகான, எளிய ஒற்றுமையை நான் கண்டிருக்கிறேன். அந்த ஒற்றுமை என்ன? நம் அனைவருக்குள்ளும் இருக்கும் அந்த அழகான ஒன்றுக்காக நாம் அனைவரும் ஏங்குகிறோம்.